108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நேர்மைக்கு பாராட்டு…

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மேகவர்ணன், 65 படுகாயமடைந்தார். சுயநினைவு இழந்த அவரை பரமக்குடி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்து பரமக்குடி அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர்.

சுயநினைவிழந்த மேக வர்ணன் வைத்திருந்த ரூ. 2,70,365ஐ உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் பரமக்குடி அரசு மருத்துவமனை டாக்டர் பிரேம்நிவாஸிடம் ஆம்புலன்ஸ் பணியாளர் பால்பாண்டி,  வாகன ஓட்டி திருமுருகன் ஆகியோர் ஒப்படைத்தனர். பால்பாண்டி, திருமுருகன் ஆகியோரின் நேர்மையை 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள மகிழ்வுடன் பாராட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.