கிராமச் சுவரில் ஓவியம் வந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவனை பாராட்டிய ஆட்சியர்.

இராமநாதபுரம் அருகே பேராவூரைச் சேர்ந்த புபேஷ் சந்திரன் – அழகு சுந்தரி மகன் பிரஜின் குமார். இவர் இங்குள்ள இராமநாதபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம், சிலம்பாட்டத்தில் இவருக்கு அலாதி பிரியம். ஒருவரை பார்த்த சில நிமிடங்களில் ஓவியம் வரைந்து அசத்தும் அசாத்திய திறன் படைத்தவர். இவரது ஒவியங்களை பார்த்து வியந்த முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி பாராட்டினார். சிலம்பாட்டத்தை மார்ச் மாதம் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பாராட்டு பெற்றார். தேசிய ஒருமைப்பாடு குறித்த ஓவியம் வரைந்தமைக்காக சுதந்திர தின விழாவில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.நடராஜனிடம் பரிசு பெற்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மையே சேவை குறித்து செப்.15 முதல் அக்.2 வரை பொது மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தின. தூய்மை இந்தியா குறித்து பேராவூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை சுவரில் மரம் வளர்ப்பு, தன் சுத்தம், ஊர் சுத்தம் தொடர்பான ஓவியம் வரைந்து மாணவர் பிரஜின் குமார், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூய்மை இந்தியா இரு வார விழிப்புணர்வு பிரசார நிறைவு நாள் விழாவில் மாணவர் பிர ஜின்குமாரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமாலினி உடன் இருந்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion