சாலை தெரு பெண்கள் தொழுகை பள்ளயில் பணியாற்றிய ஆலிம் பாராட்டு விழா..

கீழக்கரை சாலை தெரு உள்ள பெண்கள் தொழுகை பள்ளியில் பணியாற்றி வருபவர் மௌளவி SAM.அப்துஸ் சலாம் பாகவி. இவர் அத்தெரு மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், மார்க்கத்தை எத்தி வைப்பவராகவும் கடந்த 25ஆண்டு காலம் சிறப்பாக பெண்கள் தொழுகைப்பள்ளியில் பணியாற்றியுள்ளார்.

அவருடைய சேவையை கவுரவிக்கும் வகையில் இன்று (04-02-2018), ஞாயிறு மக்ரிபு தொழுகைக்குப் பிறகு மாலை 06.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இப்பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள், மதரசா குழந்தைகள், ஜமாத்தார்கள் மற்றும் ஊரில் உள்ள பல நல்லுள்ளங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை சாலை வெல்ஃபேர் அசோசியேசன், அல் மதுரஸதுன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் மற்றும் சாலை சமுததுவ குடும்பம் குழுமம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

1 Comment

  1. அப்துஸ் சலாம் ஆலிம் ரொம்ப நல்ல மனிதர் கலகலப்பாக பேசக்கூடியவர் எங்கள் இயக்கத்தின் சார்பாகவும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments are closed.