காணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்ட காவல்துறை..

சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே அழுதுக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு பொதுமக்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் திரு.குமார் உத்தரவின் பேரில் முதல் நிலை பெண் காவலர் திருமதி. கலைவாணி அந்த குழந்தையை தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்துக்கொண்டு குழந்தை விரல் நீட்டிய இடத்திற்கெல்லாம் அழைத்து சென்றனர் அங்கு குழந்தையை காணாமல் தேடி தவித்து கொண்டியிருந்த பெற்றோரை அடையாளம் கண்டு காவல் நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் குழந்தையை ஒப்படைத்தனர். தங்களைத் தேடி வந்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை ஒப்படைத்த அன்னதானப்பட்டி போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தனர்.