சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார்..

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா பாராட்டு வெகுமதி வழங்கினார்.

தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சங்கர் ,ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற பாலமுருகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்க்காகவும், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள்  ராஜாமணி, ஞான ராஜன் ,தலைமை காவலர் சண்முகநாதன் ,காவலர் சொர்ண பாலன்,மற்றும் மீனாட்சி சுந்தரம் ,ஆகியோர் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 28 பவுன் நகையை பறிமுதல் செய்ததற்க்காகவும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் நடந்த திருட்டு வழக்கில் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து திருடிய பொருட்களை மீட்பதற்காக, உதவி ஆய்வாளர் கணபதி, காவலர்கள் சொர்னராஜ், இசக்கியப்பன் மற்றும் எழிழ் நிலவன், திருச்செந்தூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 28 பவுன் நகையை மீட்டதற்க்காக, உதவி ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள், தலைமை காவலர்கள் குணசேகரன், ஜேக்கப் தங்க மோகன் , காவலர்கள் மாணிக்கராஜ், ஆனந்தராஜ், ஹரிராமகிருஷ்ணன், நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி மற்றும் சாயர்புரம் காவல் நிலைய திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்து ,திருட்டுப் பொருட்களை மீட்டதற்காகவும், இதே போன்று பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிஜயன், பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, சங்கர், ஆறுமுக துரை, விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, தருவைகுளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் இருதயராஜ், காவலர்கள் ஜெரால்டு, ஆதிலிங்கம் ,கௌரிசங்கர், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ சுந்தர் , தட்டார்மடம் தலைமை காவலர் கணேசன், சாத்தான்குளம் முதல் நிலை காவலர் மணிகண்டன், நாசரேத் காவலர் செல்லையா பாண்டியன், மெய்ஞானபுரம் காவலர் சுரேஷ்குமார், தென்பாகம் சிறப்பு சார்பு ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் லூர்தவாஸ்,ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா வெகுமதி மற்றும் பாராட்டுக்களை வழங்கினார் .
இந்த நிகழ்வின் போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன் ராமு , காவல்துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருந்தனர்