Home செய்திகள்உலக செய்திகள் ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படவும் மற்றும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் மற்றும் 04567-230410, 04567-230411, 04657-230412, 04567-230413 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50,000/க்கும் மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் துணை இராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில்நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!