இராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் APJ.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா இராமநாதபுரம் மாவட்ட நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பசுமை இந்தியா 2020 ஓவியப் போட்டியில் வெற்ற பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சோமசுந்தரம் பரிசு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பள்ளி நிறுவனர் ஹாஜி ஹபிபுல்லா கான், தாளாளர் ஹெச்.பவுசுல் ஹனியா, பள்ளி துணைத் தலைவர் முகமது ஷரபத்துல்லாஹ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண், மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் குணசேகரன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி நாயகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.