இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் சம்பந்தமான புகார் தெரிவிக்க பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம்  கலெக்டர் கூறியிருப்பது: “மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 12.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 395 பணிகளுக்கு 11.26 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 54 எம்.எல்.டி., தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் குறைந்ததால்,  தற்போது 30 எம்.எல்.டி., மட்டுமே கிடைக்கிறது. தற்போது, குடிநீர் பற்றாக்குறை, விநியோகம் தடைபடுதல், முறைகேடான இணைப்புகள், தேவைப்படும் புதிய குடிநீர் திட்டம் குறித்து தெரிவிக்கவும், மாவட்ட அளவில் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) அலுவலகத்திலும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பு தகவல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.அந்தந்த அலுவலகங்களில் பொதுமக்கள்புகார் செய்ய தனி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி எண்கள் விபரங்கள் கீழ்கண்டவாறு:-

மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க 1800 425 7040 என்ற கட்டணமில்லா நம்பரிலும், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு 04567-230490 மற்றும் 91598 22298 என்ற அலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள்: 

ராமநாதபுரம் 04567-220 404,

திருப்புல்லாணி 04567-254 211,

மண்டபம் 04567-259 234,

ஆர்.எஸ்.மங்கலம் 04561-251 226,

திருவாடானை 04561-254 228,

பரமக்குடி 04564-226706,

நயினார்கோயில் 04564- 266 229,

போகலூர் 04564-262 226,

முதுகுளத்துார் 04576-222 230,

கமுதி 04576–223 228

கடலாடி 04576-266 528.

நகராட்சிகள்:

ராமநாதபுரம் 04567-220 445,

ராமேஸ்வரம் 04573-221 264,

கீழக்கரை 04567-241317,

பரமக்குடி 04564-226 742.

பேரூராட்சிகள்:

கமுதி 04576-223 364,

முதுகுளத்துார் 04576-22 2247,

அபிராமம் 04576- 265645,

சாயல்குடி 04576-244 293,

தொண்டி 04561-253 290,

ஆர்.எஸ்.மங்கலம் 04561-251551,

மண்டபம் 04573-241 593.