Home செய்திகள் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு..

ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.20- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-2024-ம் ஆண்டுக்கான நேரடிச் சேர்க்கை செப். 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு தொழிற்பிரிவுகள்: கணினி இயக்குபவர் (COPA), சூரிய மின்சக்திவியலாளர்(Solar Technician (Eectrical), தையல் தொழில்நுட்பம், Industry 4.0-ன் புதிய தொழிற்பிரிவுகளான இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீசியன் (Industnal Robotics & Digital Manufactuning Technician), மேனுபேக்ச்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேஷன்(Manufactuning Process Control & Automation), ஈராண்டு தொழிற்பிரிவுகள்: பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), பின்னலாடை தொழில்நுட்பவியலாளர் (Spinning Technician), இயந்திர படவரைவாளர் (Draughtsman Mechanical), கம்மியர் மின்னணுவியல் (Electmtics Mechanic), இயந்திர வேலையாளர் (Minchinist) மற்றும் Industry 4.0- ள் புதிய தொழிற்பிரிவான அட்வான்ஸ்டு CNC மெஷிசினிங் டெக்னீசியன்(Advanced CNC Machining Technician), கம்மியர் மின்சார வாகனம் (Mechanic Electric Vehicle} ஆகிய அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைபேசி, மின்னஞ்சல் முகவரியுடன் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அலுவலக பணி நேரத்தில் நேரில் சென்று சேரலாம்.

இந்நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர கல்வி உதவி தொகை ரூ.750, விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடை, வரைபட கருவிகள், பயிற்சியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி நாள்: 23.9.2023. கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி எண்: , ராமநாதபுரம் 04567-231 214, பரமக்குடி -04564-231 303, முதுகுளத்தூர் 04576- 222 114-ல் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com