Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல்…

இராமநாதபுரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல்…

by ஆசிரியர்

கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பொதுமக்கள் நலனுக்காக அனைத்து அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  விலையில்லாமல் வழங்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு  ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நிவாரணத் தொகையாக ரூ.1,000 அந்தந்த நியாய விலை கடை  விற்பனையாளர் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்படும். அவ்வாறு  வழங்கும்போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதில்  விலையின்றி வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான தேதி மற்றும் நேரம்  குறிப்பிடபட்டிருக்கும். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட  டோக்கனை கொண்டு வந்து சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய  பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக அனைத்து மக்களும் சமூக இடைவெளி குறைந்தது 1 முதல் 2 மீட்டர் வரை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேற்படி நிவாரணத்தொ கை மற்றும் இலவச  பொருட்களை பெற விருப்பமில்லாதவர்கள் www.tnpds.gov.in வலைதளத்தில் பதிவு செய்து  உரிமையை விட்டுக் கொடுக்கலாம்.  மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!