கஜா புயல் ஏதிரொலி.நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி தங்கவேல்  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்று  திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16-11-2018 (வெள்ளிகிழமை) அன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலவும் கஜா புயல் காரணமாக மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்த முகாம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகின்றது. அடுத்த கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது சம்பந்தமாக கீழை நியூஸ் இணைய தள பக்கத்தில் செய்தி வெளியிட்டு கீழக்கரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை மக்கள் நல பாதுகாப்புக்கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை அறக்கட்டளை சார்பாக இலவசமாக முகாமிற்கு அழைத்து செல்ல இருந்த நிலையில் தற்போது இந்த சேவையை மறு அறிவிப்பு வரும் முகாமிற்கு தகவல் தெரிவித்து அழைத்து சொல்ல இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.