பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

அந்தமான் கடற்பகுதில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 12.11.2018 க்கு மேல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 12.11. 18 இரவுக்குள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். 14.11. 18 இல் சென்னை உட்பட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதன் எதிரொலியாக பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion