Home செய்திகள் ஆம்பூர் அருகே மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி பலி. சிறுத்தை நடமாட்டமா என கிராமமக்கள் அச்சம்…

ஆம்பூர் அருகே மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி பலி. சிறுத்தை நடமாட்டமா என கிராமமக்கள் அச்சம்…

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அபிகிரிபட்டறை பகுதியில் விவசாயி பலராமன். இவர் வீட்டின் முன்பு நேற்று(25/2-2018) இரவு வழக்கம்போல் கன்றுக்குட்டி உட்பட 4 மாடுகளை கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். இரவு தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் திடீரென கன்றுக்குட்டி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது கன்று குட்டியை மர்ம விலங்கு ஒன்று கடித்து குதறியதில் துடிதுடித்துக் கொண்டு இருந்து சிறுது நேரத்தில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிதனர்.

தகவல் பேரில் வன அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் வன உழியர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் நாகராஜ் வரவழைத்து இறந்த கன்றுக்குட்டியை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரி கவிதாவிடம் தொலை பேசியில் தொடர்பபுகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-. பிரேதபரிசோதனைக்கு பின்பு கால்நடை மருத்துவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் மர்ம விலங்கு குறித்து தெரிய வரும் என்றார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், பொன்னப்பள்ளி காப்புக்காடு பகுதியான கருங்குட்டை மலையில் சிறுத்தை பதுங்கியிருப்பதாகவும், இரவு நேரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் மற்றும் நாகம்மாள் ஆகியோரின் கொட்டைகையில் இருந்த 5 ஆடுகளை கடித்து குதறியதாகவும், கிராம மக்கள் வெளியில் செல்ல அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தனர். வனத்துறையினர் மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!