வத்தலக்குண்டு அருகே பழமையான மரம், சிலை கடத்தல் – மக்கள் போராட்டம் – வீடியோ..

வத்தலக்குண்டு அருகே கோம்பை பட்டி பஞ்சாயத்து சின்னுபட்டி கிராமத்தில் பல நூறாண்டு பழைமையான ஆலமரம் வெட்டி கடத்தல், மரத்தின் அருகே இருந்த பழங்கால கன்னிமார் சிலையும் திருட்டு.

சின்னுப்பட்டி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த ஆலமரம், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்து அந்த தீயை அணைத்தனர், தற்போது அந்த பழமை வாய்ந்த ஆல மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .