இராமநாதபுரம், மண்டபம் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்….

இராமநாதபுரம் லோக் சபா தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைப்பு செயலர் முனியசாமி, மாவட்ட கழக செயலர் வ.து.ந.ஆனந்த், மண்டபம் ஒன்றிய கழக செயலர் ஸ்டாலின்(எ) ஜெயச்சந்திரன், துணை செயலர் எம்.ஏ.பாக்கர் உள்பட பலர் பேசினர்.

மண்டபம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் மலைச்சாமி தலைமை வைத்தார் ராமநாதபுரம் நகர் செயலர் ரஞ்சித், மாவட்ட வர்த்தக செயலர் தவமுனி சாமி, இணைச் செயலர் செல்வம் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை நலப் பிரிவு தலைவர் பைராம்கான் வரவேற்றார்.

லோக் சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மாவட்ட செயலாளர் வது ந ஆனந்த், அமைப்புச் செயலர் முனியசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட மீனவர் அணி செயலர் ஜோசப், இளைஞர் பாசறை செயலர் விஸ்வநாதன், மண்டபம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலர் ராஜேந்திரன், பட்டணம் காத்தான் ஊராட்சி கிளை செயலர் ராஜேந்திரன், ஒன்றிய இணைச் செயலர் அபுபக்கர், களேந்திரன் (குயவன்குடி), முனியசாமி (வாலாந்தரவை ), முத்துவேல் (பெருங்குளம்), ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் சிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய செயலர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்தார்.

#Paid Promotion