வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேட்டில் அம்மா திட்டம்…

அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடி கொண்டு சேர்ப்பது தான் அம்மா திட்டம்.  கண்டிப்பேடு கிராமத்தில் நடந்த அம்மா திட்டத்திற்கு திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார். சமூக நல திட்ட தாசில்தார் நரசிம்மன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினார்.

துணை தாசில்தார் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் , கிராம நிர்வாக அலுவலர்கள் கோபி.சுரேஷ் பாபு மற்றும் கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை திருவலம் சுகாதார துறை கோவிந்தசாமி வழங்கினார். கண்டிப்பேடு கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை நன்றி கூறினார்

கே.எம்.வாரியார்:- வேலூர்