108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மண்டல கலந்தாய்வு கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் மண்டல கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பணியாளர்கள் மீதான விரோதப் போக்கை நிர்வாகம் விலக்கி கொள்ள வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், விடுப்பின்றி உழைக்கும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், திருச்சியில் நடைபெற இருக்கும் ஒப்பந்த நர்ஸ்கள் மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத்தலைவர் வரதராஜன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் பிரேம்குமார், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அன்பு உள்பட பலர் பங்கேற்றனர்.