Home செய்திகள்மாநில செய்திகள் மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது..

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது..

by Askar

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 65 ஏக்கரில் 44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு புதிய மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது இந்த அரக்கத்தை வருகின்ற 23ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார் அதனை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட மதுரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அப்போது மைதானத்தின் உள்பகுதியில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தது அதில் கலைஞர் நூற்றாண்டு விழா ஏறு தழுவுதல் அரங்கம் என பெயர் குறிப்பிட்டிருந்தது இதனால் சில தினங்களாக புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பெயர் வைப்பதில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது,

கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் அரங்கம் என்ற பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com