கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக மழை தொழுகை சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை இன்று (06-08-2017) காலை ராயல் திடலில் சிறப்பாக நடைபெற்றது.

இத்தொழுகையில் பல தெருக்களில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அல்அமீன் அமைப்பைச் சார்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த மழைத் தொழுகை சிறப்பாக நடைபெற உதவி செய்த NASA, MYFA மற்றும் தெற்கு தெரு சங்க நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.