Home செய்திகள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஐந்து வருட சேவையை நிறைவு செய்யும் “மலிண்டோ ஏர்”…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஐந்து வருட சேவையை நிறைவு செய்யும் “மலிண்டோ ஏர்”…

by ஆசிரியர்

மலிண்டோ ஏர் ஆனது மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மலேசியா-இந்தோனேசியா கூட்டு நிறுவனம் ஆகும். கடந்த ஜனவரி 1, 2019 உடன் தனது ஐந்தாண்டு சேவைகளை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 2 முதல் இந்தியாவின் முதல் விமானசேவையாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் தனது சேவையைத் தொடங்கியது. அதுவும் மலேசியாவில் விமானநிறுவனம் தொடங்கி ஒன்பதே மாதத்தில் தனது முதல் இந்திய சேவையாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் தனது தினசரி சேவையைத் தொடங்கியது.

தற்போதைய நிலையில் தினசரி இரண்டு சேவைகளை திருச்சிராப்பள்ளி மற்றும் கோலாலம்பூருக்கு இடையில் வழங்கி வருகின்றது. அவ்வப்போது, பயணிகளின் தேவையைப் பொறுத்து தனது மூன்றாவது சேவையையும் வழங்கிவருகின்றது.

தினசரி இரண்டு விமானசேவைகளுக்கான காலஅட்டவணை வருமாறு:- 1. தினசரி காலை கோலாலம்பூரில் 8.30 மணிக்கு புறப்படும் மலிண்டோ ஏர் OD 221 ஆனது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தை காலை 9.45க்கு வந்தடையும். திரும்பு வழித்தடத்தில், தினசரி காலை திருச்சிராப்பள்ளியில் 10.35 மணிக்கு புறப்படும் மலிண்டோ ஏர் OD 222 ஆனது கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தை மாலை 17.05க்கு சென்றடையும். 2. தினசரி இரவு கோலாலம்பூரில் 21.20 மணிக்கு புறப்படும் மலிண்டோ ஏர் OD 223 ஆனது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தை இரவு 22.35க்கு வந்தடையும். திரும்பு வழித்தடத்தில், தினசரி இரவு திருச்சிராப்பள்ளியில் 23.25 மணிக்கு புறப்படும் மலிண்டோ ஏர் OD 224 ஆனது கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தை அடுத்தநாள் அதிகாலை 5.55க்கு சென்றடையும்.

மலிண்டோ ஏர் விமானநிறுவனமானது, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு சேவை வழங்கும் நான்காவது வெளிநாட்டு விமானநிறுவனமாகும். தற்போதைய நிலையில் திருச்சிராப்பள்ளி மற்றும் கிழக்காசியாவுக்கு இடையில் ஏர் ஏசியா, ஸ்கூட், மலிண்டோ ஏர் ஆகிய கிழக்காசிய விமானநிறுவனங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய இந்திய விமான நிறுவனங்களும் மொத்தம் ஐந்து விமான நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றன. இவற்றில் மலிண்டோ ஏர் மட்டுமே முழுகட்டண (Executive) விமானசேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மட்டுமே கிழக்காசிய வழித்தடங்களில், இலவச பயணஉடைமை அனுமதி, மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி, பயணத்தில் இலவச உணவு வசதி, சில குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணத்தில் குறைந்த கட்டணத்தில் “வைபை” வசதி, குறைந்த கட்டணத்தில் உயர்வகுப்பு மேம்பாடு (Seat Upgrade) வசதி, இடைத்தங்களில் (Transit) ஓய்வு (Lounge) வசதி போன்ற அனைத்து வசதிகளையும் மலிண்டோ ஏர் தருகின்றது.

இன்றைய அளவில் மலிண்டோ ஏர் ஆனது மொத்தம் 46 விமானநிலையங்களுக்கு சேவை வழங்கி வருகின்றது. இந்திய துணைக் கண்டத்தில் 11 விமான நிலையங்களுக்கும், கிழக்காசியா மற்றும் வடக்கு ஆசியாவைப் பொறுத்து 35 விமானநிலையங்களுக்கும் சேவை வழங்கிவருகின்றது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்து பயணிகளின் ஆஸ்த்திரேலியாவுக்கான முதல் தேர்வு முழுக்கட்டண விமானசேவை நிறுவனமான மலிண்டோவாகத்தான் இருக்கும். கோலாலம்பூரில் இருந்து ஆஸ்த்திரேலியாவின் “பெர்த்” விமானநிலையத்திற்கு நேரடி இணைப்பு விமானசேவையையும், பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்ன் விமானநிலையங்களுக்கு, இந்தோனேசியாவின் “டென்பாசர்-பாலி” வழியிலான (Stop Over) இணைப்பு விமானசேவையை இருவழித்தடத்திலும் வெற்றிகரமாக வழங்கி வருகின்றது.

இது தவிர தற்போது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள மக்களிடையே சமீபத்தில் அதிகரித்துவரும் சீனாவின் குவாங்சோ மற்றும் பீகிங் விமானநிலையங்களுக்கும் இணைப்பு விமானவசதி தருகின்றது. மேலும் முக்கிய விமானநிலையங்களான ஹாங்காங், தைவான், பாங்காக், சியாங்மாய், ஹனோய், சைகூன், நாம்பென்ஹ், சிங்கப்பூர், மேதான், ஜகார்த்தா போன்ற விமானநிலையங்களக்கும் கோலாலம்பூரில் இருந்து நேரடி இணைப்பு விமானசேவைகள் வழங்கிவருகின்றது.

பிற விபரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் மலிண்டோ ஏர் விமானநிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள். (+91)0431-2340209/2341772 வேலை நேரம். வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை. சனிக்கிழமைகளில், காலை 9.30 முதல் மதியம் 2.00 வரை. மின்னஞ்சல் முகவரி, [email protected]

மலிண்டோ ஏர் ஆனது, திருச்சிராப்பள்ளி மற்றும் கோலாலம்பூருக்கு இடையில் சேவைகள் அதிகரிக்கும் என நம்புவோமாக! இதன் பிற வணிகக் கூட்டாளி விமானநிறுவனங்களான இந்தோனேசியாவின் பாதிக் ஏர் மற்றும் லயன் ஏர், தாய்லாந்தின் தாய் லயன் போன்ற விமான நிறுவனங்களின் சேவைகளை திருச்சிராப்பள்ளிக்கு அளிக்கும் என நம்புவோமாக! மேலும் பல்லாண்டு வெற்றிகரமாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சேவை வழங்க வாழ்த்துவோமாக!

செய்தி:- ஃபகர்ருதீன், திண்டுக்கல்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!