Home செய்திகள் திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்..

திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

ராமநாதபுரம், அக்.20 – 

திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக் கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமை வகித்தார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.சி.ஆனி முத்து, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஅன்வர்ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் மதிவாணன் வரவேற்றார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் சாகுபடி பாதித்த விளைநிலங்கள்  உரிய முறையில் கணக்கீடு செய்யாமல், பாரபட்சம் காட்டியதால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களில் பெரும்பாலான வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காப்பீட்டுத்தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில எந்த ஒரு கட்சியினரும் கோரிக்கை வைக்காமல் வேளாண் இடுபொருள் மானியம், வறட்சி நிவாரணம், இழப்பீடு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிவித்து செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பயிர் காப்பீட்டுத்தை 38 வருவாய் மாவட்டங்களில் 100 % கணக்கீடு செய்து வழங்க ஆணையிட்டவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் எழுப்பியவர் எடப்பாடி பழனிச்சாமி. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை அனைவருக்கும் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில்  தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் பதவிக்கு இலக்கணமின்றி முதல்வர் ஸ்டாலின் பொய் பேசிவருகிறார். அதிமுக ஆட்சியில் அமல்படுத்திய தாலிக்கு தங்கம், மகளிர் திருமண உதவித்தொகை, பணிக்குச் செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டர் மானியம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திய அரசு திமுக அரசு. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்தை அறிவித்தவர் ஜெயலலிதா. . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு நிதி ரூ.16,500 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட காவிரி -குண்டாறு- வைகை நதி நீர் இணைப்பு திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரும் கூட திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காவிடில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து வந்து மற்றொரு போராட்டத்தை அதிமுக நடத்தும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்பி எம்எஸ் நிறைகுளத்தான், முன்னாள் எம்எல்ஏ முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், இணை செயலர் கவிதா சசிகுமார்,  அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேது.பாலசிங்கம், ராமநாதபுரம் நகர் முன்னாள் செயலர்  கே.சி.வரதன், பரமக்குடி நகர் செயலாளர் எம் கே ஜமால், மண்டபம் நகர் செயலர் கே எம் ஏ சீமான் மரைக்காயர், மாணவரணி மாவட்ட செயலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஏ. சரவணக்குமார், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ஜானகி ராமன், அந்தோணி ராஜ், கருப்பையா  மருத்துவ அணி மாவட்ட தலைவர் கே.இளையராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலர்கள் ஆர்.ஜி.ரத்தினம், எஸ்.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com