Home செய்திகள் சிறுதானியங்கள் சாகுபடி முறைகள் விவசாயிகள் பயிற்சி..

சிறுதானியங்கள் சாகுபடி முறைகள் விவசாயிகள் பயிற்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.12 –  இராமநாதபுரம் வட்டாரம் உழவர் மையத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகள் பயிற்சி இன்று நடைபெற்றது. சிறுதானியப் சாகுபடி தொழில்நுட்பம் உரங்களின் முக்கியத்துவம், சிறுதானியங்கள் சாகுபடி முறைகள்,  சிறுதானியப் பயிர்களில் உள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள், மானாவாரி பயரிகளுக்கு உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள், விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கே.பி.முருகேசன் எடுத்துரைத்தார்.

பயிர் இடைவெளி, களைக்கட்டுப்பாடு, ஊடுபயிர் சாகுபடி,  சிறுதானியப் பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், ரகத்தேர்வு, விதைநேர்த்தி, நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிவது, பயிர்களை தாக்கும் பூச்சி,  நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் கடைபிடிக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி  குறித்து  ராமநாதபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார். சிறுதானியப் பயிர்களான குதிரைவாலி, கேழ்வரகு வரகு தினை, கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், அவற்றின் நன்மைகள் பற்றி  வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.வள்ளல் கண்ணன் எடுத்துரைத்தார். சிறுதானியப் பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், விதைநேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பயிர்கள் சீராக வளர்வதுடன் வறட்சி தாங்கி வளரும் சக்தி அதிகரிக்கிறது என  ராமநாதபுர மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் ச.சிவகாமி  கூறினார். விதை கடினப்படுத்துதல், உயிர் உரங்கள் விதை நேர்த்தி முறைகள் பற்றி  ராமநாதபுர வட்டார உயிர் உர உற்பத்தி மையம் வேளாண்மை அலுவலர் சாலினா  கூறினார். இயற்கை உரங்களின் நன்மைகள், பயன்பாடு, வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி ராமநாதபுரம் வட்டார வேளாண் அலுவலர் ந.தமிழ் கூறினார். இப்பயிற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வான கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்  ராஜேஸ்குமார், பாலாஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப.கோசலாதேவி நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com