Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்புல்லாணி வேளாண் துறை சார்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் !

திருப்புல்லாணி வேளாண் துறை சார்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் !

by Baker BAker

இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மாநில விரிவாக்க திட்டம் இணைந்து சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பில் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளை அழைத்து வரப்பட்டு விவசாயிகளுக்கு சமுதாய அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் கலைச் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் : விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப் பொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் சேதத்தினை தவிர்க்க, பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அதிக லாபம் ஈட்ட கூடிய பதப்படுத்தப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் இருமடங்கு லாபம் பெறலாம் எனக் கூறினார். மேலும் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பம், சிறுதானிய உற்பத்தி, சிறுதானியத்தின் நன்மைகள், உயா் விளைச்சல் ரகம், சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், சந்தை வாய்ப்பு, மாற்று பயிா் சாகுபடி மூலம் பாசன நீா் பயன்பாட்டை குறைத்தல், சா்வதேச சிறுதானிய ஆண்டை கொண்டாடுதல், மண் வள மேம்பாடு, ஆகியவைகள் குறித்து விவாயிகளிடையே விளக்கிக் கூறினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ச. ஜோசப் செய்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com