Home செய்திகள் முகநூலை மூலதனமாக்கி.. இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் “AFRIN MOBILES & DTH”..- ஒரு நேர்காணல் … வீடியோ..

முகநூலை மூலதனமாக்கி.. இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் “AFRIN MOBILES & DTH”..- ஒரு நேர்காணல் … வீடியோ..

by ஆசிரியர்

FACEBOOK எனப்படும் முகநூல் புத்தகம் என்பது ஒரு நாள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை எனும் அளவுக்கு பல பேர் அதற்கு அடிமை.  அதில் பல பேர் அதை முறைப்படுத்தி சந்தைபடுத்துவதையே (FB MARKETING) முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்கள்.  இன்னும் சிலரோ பொண் போன்ற நேரத்தை எந்த பலனும் இல்லாமல் முகநூல் புத்தகத்திலேயே தொலைப்பவர்களும் உண்டு.  ஆனால் இதில் மாறுபட்டு நிற்பவர்தான் AFRIN MOBILES & DTH நிறுவனத்தின் உரிமையாளர் பாம்பனை பூர்விகமாக கொண்டு தற்பொழுது இராமநாதபுரத்தில் தொழில் செய்து வரும் சேகு மைதீன்.

இவர் தன்னுடைய தொழில் விளம்பரத்திற்காக பெரிய தொகை எதுவும் செலவு செய்யாமல் முகநூல் பக்கத்திலேயே அவர் வியாபாரம் செய்யும், டிஷ் ஆண்டனா, மொபைல் ரீசார்ஜ், மொபைல் போண்கள், மெமரி கார்டு, குறைந்த விலையில் தரமான இறக்குமதி செய்யப்பட்ட தொலைகாட்சி பெட்டிகள் என அனைத்து வியாபாரத்திற்கும் முகநூல் பக்கத்திலேயே பார்வையாளர்களை ஈர்க்கும் வார்த்தைகளால் விளம்பரம் செய்து, அதன் மூலம் தரமான சேவையை வழங்கி இதுவரை 3,000கும் மேலான திருப்திகரமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார்.

அவருடைய வியாபார உத்தி மற்றும் வெற்றியின் ரகசியத்தை அவரிடம் கேட்ட பொழுது, “நான் சவுதி அரேபியா தலை நகர் ரியாத்தில் Gulf catering கம்பனியில் கேப்டேரியா சூப்பர்வைசராக 9 வருடம் வேலை பார்த்தேன். எல்லோரும் நினைப்பதுபோல் நாமும் ஊரில் போய் ஏதாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பயம், வெளிநாட்டில்  மாசம் முடிந்தால் கையிலே சம்பளம் , ஸ்டார் ஹோட்டல் பார்ட் டைம் extra வருமானம். நம் ஊரில் அந்த சொகுசு கிடைக்குமா? என்று, ஆனாலும் ஒரு முடிவோடு  ஊருக்கு வந்து இராமநாதபுரத்தில் mobile கடை ஆரம்பித்தேன். ஆனால் எதற்கு பயந்தேனோ அதே போல் எதிர்பார்த்த வருமானம் இல்லை.

மீண்டும் குழப்பம், திரும்பி போய் விடலாமா…??? என, இருந்தாலும் மனம் தளரவில்லை.  மறுபடி போனாலும் இதே முயற்சியைதான் அடுத்த முறை இந்தியா வரும்போது எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் அதற்க்கு இப்போதே ஏதாவது முயற்சி செய்து பார்ப்போம் என்ற முடிவோடு பல வகையில் சிந்தித்தேன், அப்பொழுது தான் தோன்றியது எல்லோரும் பொழுது போக்கிறக்காக பயன் படுத்தும் facebookகை நாம் ஏன் வியாபாரத்திற்கு பயன் படுத்தக்கூடாது என்று எண்ணி

முதன் முதலாக மெமரி கார்ட்  விளம்பரத்தை முகநூலில் பதிவிட்டு விளம்பரம் செய்தேன். அதற்கான பலன் அடுத்தநாள் மாலையே கிடைத்தது.  காலேஜ் மாணவர்கள் வர தொடங்கினர். அப்பொழுதுதான் முகநூல் மூலமாகவும் சிறந்த முறையில் தொழில் புரியலாம் என புரிந்தது மற்றும் மனதில் தன்னம்பிக்கையையும் தந்தது.

பின்னர் அடுத்த கட்டமாக முகநூலை பயன்படுத்தி என் வியாபாரத்தின் கவனத்தை வெளிநாடு வாழும் நண்பர்களின் பக்கம் திருப்பினேன், எனக்கு அவர்கள் பிரச்சினை தெரியும்,  அவர்கள் விரும்புவதை உடனே ஊரில் சேர்க்க முடியாது, அதற்கு அவர்கள் ஊருக்கு விடுமுறை செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.  அதை பயன்படுத்தி வெளிநாட்டு மக்களின் தேவைக்கேற்ப சிறந்த விலையில் சாட்டிலைட் சேனல், டிஷ் டிவி மற்றும் அனைத்தும் தரமான விலையில் திருப்தியான சேவையில் கொடுக்க ஆரம்பித்தேன்.  அதுவே என் வியாபாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.  பொதுவாக வெளிநாட்டில் டிவி வாங்கினால் அந்த டிவியின் பாதி விலையை சுங்க வரியாக கட்டவேண்டும், அதை எங்களுடைய சேவை நிவர்த்தி செய்தது.  இன்று எங்கள் கடைக்கு 90 சதவீதம் வெளிநாட்டில் வாழும் மக்கள்தான்.

நாங்கள் ஆரம்பித்த  LED TV எனும்  “x-press” டோர் டெலிவரி சர்வீஸ் நல்ல வரவேற்பை பெற்றது, அதைத் தொடர்ந்து மினி ப்ரொஜெக்டர் , 5.1Home தியேட்டர்,  CCTV , RO வாட்டர் , வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் , சிறந்த மொபைல் போண் போன்றவைகளையும் டோர் டெலிவரி செய்கிறோம்.

இதில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான விசயம் எனது வியாபாரத்தில் 90% நண்பர்களை நான் முகநூல் மூலமாகவே சந்தித்துள்ளேன் நேரில் பார்த்ததில்லை. இதுவே எங்கள் நிறுவனத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அதன் மூலம் அவர்களும் உறவினர்களுக்கும் நேரடியாகவும், முகநூல் மூலமாகவும் அறிமுகம் செய்து வருகிறார்கள்.  இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்” என பூரிப்புடன் சொல்லி முடித்தார்.

இந்நிறுவனத்தின் விபரங்களை  http://www.facebook.com/afrinmobiledth என்ற முக புத்தகத்தில் பார்க்கலாம்.  மேலும் நீங்களும் பொருள் வாங்க விரும்பினாலோ அல்லது அவரை வாழ்த்த விரும்பினாலோ

அப்ரின் மொபைல் DTH,

320 AKS  காம்ப்லெக்ஸ்,

GH – ரோடு,

இராமநாதபுரம்

செல் எண்:-00919940876350

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவருடைய தொழில் வளரவும், இன்னும் பல சிகரங்களை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com