பழங்கால கேரள சுவையை தரும் “ஆதமின்ட சாயாக்கடை”…

“ஆதமின்ட சாயாக்கடை” துபாயில் அனைவரும் விரும்பி செல்லக்கூடிய இடம் என்றால் அது மிகையாகாது.  சுவையான உணவே ஒரு உணவகத்தின் வெற்றி ரகசியம் என்பது இதற்கு பொருந்தும்.  பழங்கால கேரள உணவை, அதன் தன்மை மாறாமல் வழங்குவதே இந்த உணவகத்தின் சிறப்பம்சமாகும்.

இங்கு உணவு மட்டும் பழங்கால முறையில் இல்லை, உணவகத்தின் நுழைவு வாயிலில் தொடங்கி, வெளியில் இருக்கும் டீ கடை, பொட்டிகடையில் விற்கும் தேன் மிட்டாய் வகைகள், 42 வகையான டீக்கள், வெளியே மற்றும் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள்,  உள் அலங்காரம், அழகுக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வரை அனைத்திலும் பழங்கால சாயலுடன் சிறப்பாக அமைத்துள்ளனர்.

இந்த உணவகத்தில் உணவு பரிமாறக்கூடியவர்களும் கேரளாவின் பாரம்பரிய உடையான பச்சை பெல்ட் மற்றும் கைலி வண்ணம் வலம் வருவது மிகச்சிறந்த விசயமாகும்.  அது போல் இங்கு உள்ள உணவுகளுக்கும் மாறுபட்ட கோணத்தில் பெயர்கள், உதாரணமாக வீரப்பன் சிக்கன், பொட்டல சோறு, சட்டி சோறு என பல வகை.

மேலும் அக்கால உணர்வை தூண்டும் வண்ணம் உணவகம் முழுவதும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த கேசட், விளக்குகள், சைக்கிள், டிவி, ரேடியோ என பல் வேறு வகையான பொருட்கள் அலங்காரப்படுத்தப்பட்டுள்ளது தனித்தன்மையாகும்.

இந்த “ஆதமின்ட சாயாக்கடை”துபாயில் உள்ள அசைவ உணவு விரும்பிகளுக்கு விருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை.