சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 7 பேர் பலி,!

சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனிடையே பெங்களூருக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்து லாரியை கவனிக்காமல், அருகில் வந்து லாரியை கவனித்த  பேருந்தின் ஓட்டுநர் பதற்றமடைந்த அவர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே பாலக்காடு நோக்கி சென்ற மற்றொரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .