சத்திரக்குடி அருகே கர்நாடகா சுற்றுலா வேன்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல் கீழக்கரையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிலர் சென்னைக்கு ஆம்னி காரில் இன்று (23/01/2021) காலை புறப்பட்டனர்.

சத்திரக்குடி அருகே தபால் சாவடி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது  கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜா செய்யது அகமது 60, அகமது ஹசன் 32, ரூபினா 58 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.