
மதுரை ஆரப்பாளையம் அருகே மறவர் 2வது தெரு பகுதியை சேர்ந்த முருகன் – முத்து தம்பதியினருக்கு 4பெண் குழந்தைகள் இருந்துள்ளது. மூத்த பெண்குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி (12)வயதுஆகிய இருவரும் நேற்று (06/12/2020) மாலை வைகை ஆற்றில் குளிக்கசென்றுள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேடிவந்தனர். இந்நிலையில் இரு சிறுமிகளின் உடல்கள் ஆரப்பாளையம் மற்றும் எல்.ஐ.சி பாலம் அருகே சடலமாக மிதந்து கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டுசெல்லப்பட்டது.
இது குறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் மீட்பு பணிகளை பார்க்க பொதுமக்கள் குவிந்த்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.