டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சாய்ந்தது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத் தெருவில் ஜும்மா பள்ளி பின்புறம் ஜல்லிகள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மரத்தின் மீது மோதி மரக்கிளைகள் மின் கம்பியின் மீது பட்டு மின் கம்பம் சரிந்து விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வைத்தனர். பின்பு அப்பகுதிக்கு தற்காலிகமாக மின்சாரம் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய மின்கம்பத்தை நாளை நடுவதாக தெரிவித்தார்கள்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு