இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் விபத்து – கணவன், மனைவி பலி – 4 பேர் காயம் .:

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர், 42. இவர் மண்டபம் சுடுகாடு பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் மனைவி பிரமிளா, 32, உடன் இரு சக்கர வாகனத்தில் (தலைக்கவசம் அணிந்திருந்தார்) மண்டபத்தில் இருந்து உச்சிப்புளிக்கு சென்றார். மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியில் சென்ற போது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் பிரமிளா ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்திற்கான காரணம் குறித்து  குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்