அரசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கலி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது வெங்கிலி அருகே டீசல் தீர்ந்து சாலையோரம் நின்ற போது, அதே சாலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தபோது வெங்கி என்ற இடத்தில் அரசு பேருந்து லாரியின் பின் பக்கம் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

ஆம்பூர் கிராமிய போலீஸார் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்