வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலி….

நிலக்கோட்டை அருகே உள்ள ராமன்செட்டிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 33. லாரி டிரைவர் நேற்று இரவு ரமேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  பள்ளபட்டி வந்தபோது அந்த வழியாக வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை