Home செய்திகள் உசிலம்பட்டி-வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

உசிலம்பட்டி-வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

by mohan

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படுவது 58 கிராம கால்வாய் ஆகும்.கால்வாயில் தண்ணீர் வந்தால் 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில் வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்.ஆனால் தற்போது வைகை அணையின் நீர்;மட்டம் 70 அடியை எட்டிய போதும் தமிழக அரசு தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் திறக்க வலியுறுத்திய பல்வேறு அமைப்பினர்-விவசாயிகள் போராட்டம் நடத்திய போதும் தண்ணீத் திறக்கப்படவில்லை.இந்நிலையில் தண்ணீர் திறக்காமல் கால தாமதப்படுத்தி வரும் தமிழக அரசைக் கண்டித்தும் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் விவசாய சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்கத்தினர் மட்டுமல்லாது அனைத்து கிராம மக்களும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் உள்பட அகில இந்திய பார்வர்டு பிளாக் நாம் தமிழர், பாரதிய பார்வட் பிளாக், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் உள்பட பல்வேறு கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com