Home செய்திகள் கடையநல்லூர் அருகே விவசாய பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்; யானைகளை விரட்டும் பணி தீவிரம்..

கடையநல்லூர் அருகே விவசாய பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்; யானைகளை விரட்டும் பணி தீவிரம்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து அவ்வப்போது விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரையா என்பவருக்கு சொந்தமான வாழை மரங்கள், வள்ளிநாயகம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள், வலங்கையா, வேலுச்சாமி, வெள்ளத்துரை உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள், மா, பலா மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களாக யானைகள் கூட்டம் சொக்கம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றித் திரிந்து வருகிறது. இது குறித்து விவசாயி வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி பீட் வனத்துறை அதிகாரிகள் வனவர் முருகேசன் தலைமையில் அங்கேயே முகாமிட்டு யானைகளை வெடிவைத்து இரவு பகலாக விரட்டும் பணி நடந்து வருவதாக கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!