மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வாட்ஸ் அப்பில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

மதுரை மாநகராட்சி78 ஆவது வார்டுக்குட்பட்ட மேலவாசல் பகுதியில் மூன்று நாட்களாக மக்கள் குடிக்கும் குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது ,இதனை மாநகராட்சி ஆணையாளர் வாட்சப் புகார் எண்ணுக்குபுகாராக அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் கழிவுநீரோடு கலந்து துர்நாற்றத்துடன் வரும் நீரை ஒரு கேனில் எடுத்து மாநகரட்சி ஆணையாளரிடம் நேரடியாக கொடுக்க முயற்ச்சித்தேன் பொங்கல் பண்டிகை என்பதால் ஜல்லிக்கட்டு விழா சுகாதர சுற்றுக்கு (ரவுண்ட்ஸ்) சென்றுள்ளார் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் மனுவினையும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து வரும் நீரையும் காண்பித்தேன், லாரித்தண்ணீர் அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர் ,உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கையும் மேற்கொண்டனர் ,அத்தோடு மேலவாசல் பகுதி வாட்சப் புகார்களை அலட்சியம் செய்யும் அதிகாரிகளை ஊழியர்களை மேற்பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவினை #தமிழ்ப்புலிகள்_கட்சியின் சார்பாக மனுவினை நேரடியாக அளித்தேன்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply