கீழக்கரையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் …

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் அகமது தெரு பொது நல சங்கம் இணைந்து டெங்கு பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் அகமது தெரு நூலகத்தில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கி டெங்கு கொசுகள் அதிகளவில் உற்பத்தி ஆகியது, கீழக்கரை பகுதிகளில் அதிகளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனைதொடர்ந்து கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தலைமையில்  மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது ஹாஜா சுஐபு ஆகியோர் முன்னிலையில், அகமது தெரு பொதுநலச்சங்க செயலாளர் நெய்னா,கபார்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் இணைந்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இதில் நகர்துணை செயலாளர்கள் ஜமால்பாருக் மற்றும் கென்னடி மாவட்ட பிரதிநிதி மரைக்கா இளைஞரணி துணை அமைப்பாளர் கெஜி, பயாஸ், நயிம், அல்லா பக், மற்றும் வட்டார வள மருத்துவர் ராசிக்தீன்,சுகாதார ஆய்வாளர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பரிசோதனை மேற்கொண்டனர் கொரோனா தடுப்பூசி போடாத நபர்கள் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர்.