Home செய்திகள் நெல்லையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வீசிய துர்நாற்றம்; தமுமுக மமக வினரின் கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு..

நெல்லையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வீசிய துர்நாற்றம்; தமுமுக மமக வினரின் கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு..

by mohan

மேலப்பாளையம் 29வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுகள் குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வரும் நிலையில், கழிவுகளை அகற்றி தூய்மை படுத்துமாறு தமுமுக மமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.தமுமுக மமக வினரின் கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 29வது வார்டு ஞானியாரப்பா பீ காலணி, சுசில்நகர், ஹாஜரா காலேஜ் ரோடு, ஹாமீம்புரம் 5 முதல் 12 தெருக்கள், அப்துல் காதர் ஜூம்ஆ பள்ளி வாசல் போன்ற குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சாக்கடை கழிவுகள் கண்ணிமார்குளத்தில் தேங்கியதால் அப்பகுதி குடியிருப்பு முழுவதும் கடுமையான துர்நாற்றமெடுத்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி முழுவதிலுமுள்ள மக்கள் சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில், இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமுமுக மமகவினரிடம் முறையிட்டனர்.

அதை தொடர்ந்து குளத்துகரை மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியை தமுமுக‌ மமக மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் மாவட்ட துணைச் செயலாளர்கள் அ.காஜா, கம்புகடை ரசூல், மாவட்ட, மற்றும் தெற்கு, வடக்கு பகுதி நிர்வாகிகள், 29வது வார்டு நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தனர். மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் மாநகராட்சி, மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டார். மேற்படி துர்நாற்றம் வீசும் பகுதியை சுத்தம் செய்து தருவதாக உறுதியளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கழிவுகளால் துர்நாற்றம் வீசி வரும் குளத்தினை பார்வையிட்டு மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி ஊடக அணி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் அப்போது உடனிருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!