மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அகில இந்திய தலைக்காய மற்றும் நரம்பியல் நிபுணர்கள் 29வது மாநாடு .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் தலைக்காயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது.இதில் அகில இந்திய தலைவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் திவான் மற்றும் அகில இந்திய செயலாளர் சுமித் சிங் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு கொரானா பெருந்தொற்று காலம் காரணமாக அகில இந்திய நரம்பியல் நிபுணர் கூட்டம் நடைபெறவில்லை.தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெறும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் களுக்கான மாநாட்டில் 540 மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கம் தலைக் காயம் ஏற்படும் போது உயிர் இழப்பு ஏற்படாமல் எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்து நரம்பியல் மற்றும் தலைக்காய மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது.மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த கேள்விக்கு மூளை சாவு அடைந்த நபரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்கள் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் வழங்கப்படுகிறது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.இதில் வயதிற்கு ஏற்றார் போல் கிடைக்கும் உடல் உறுப்புகளை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10 வயது சிறுவன் இறந்து விட்டால் அவர் உடல் உறுப்புகளை விவரிக்கும் 60 வயது உள்ள முதியவருக்கு வழங்கப்படமாட்டாது. 10 வயது உடைய மருத்துவ சேவை உள்ள நபர்களுக்கு உடல் உறுப்புகள் வழங்கப்படும் மேலும் இது குறித்து கோர்ட்டு உத்தரவு வழங்கிய நடைமுறைகளை கடைபிடித்து அதன்படி செயல் படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்