சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா பால்குட வைபவம் பக்தர்கள் இல்லாமல் உள் திருவிழாவாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே அதிக நாட்கள் திருவிழா நடைபெறும் கோவில்களில் ஒன்று. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரானா பாதிப்பினால் திருவிழா நடைபெறவில்லை .எனவே இன்று காலை அம்மன் கோவிலில் வளாகத்திற்குள் ஒரே ஒரு பால்குடம் மட்டும் சண்முகம் பூசாரி எடுத்து வந்தார். கதவுகளுக்கு வெளியே இருந்த பக்தர்கள் குலவையிட்டு வரவேற்றனர். தீபாராதனை காட்டப்பட்டு கதவுகள் சாத்தப்பட்டன. கொரானா பயம் நீங்கி அடுத்த ஆண்டாவது திருவிழா முழுமையாக நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered