கொரோனா காலத்தில் பணியாற்ற தன்னார்வலர்கள் தேவை…. கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சில நபர்கள் மருத்துவமனையிலும் சில நபர்களை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக தன்னார்வலர்களை கீழக்கரை நகராட்சி எதிர்பார்க்கிறது.

இது சம்பந்தமாக கீழக்கரை ஆணையாளர், “தொண்டு செய்ய விரும்பியவர்கள் காலை 10.00 மணி அளவில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார  மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும்”  என்றும் கூறினார். 

மேல் விபரங்களுக்கை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு
பூபதி ஆணையாளர்
97504 64501
சக்திவேல் சுகாதார மேற்பார்வையாளர்
98409 09198

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image