மூன்று பெரிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் மரண அடி கொடுத்து பாடம் புகட்டி உள்ளனர். -விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி.

விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை கருப்பாயூரணி யிலுள்ள தன்னுடைய தாயாரை சந்திப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை நல்கி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க வாக்களித்துள்ளனர். திமுக கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அசாம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் மரண அடி கொடுத்து பாடம் புகட்டி உள்ளனர். இந்த மாநிலங்களில் கட்சிகளுக்கு இடமில்லை சமூகங்களை சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் சதி முயற்சிகளுக்கு இடமில்லை என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். சனாதன எதிர்ப்பை முன்னிறுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு அளித்துள்ளனர் வெற்றியை வழங்கியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு பொதுத்தொகுதிகளில் போட்டியிட்டது இரண்டிலும் வெற்றியை தொடங்கியுள்ளன விடுதலை சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் முடக்கி தனிமைப்படுத்தி விடவே முயற்சித்த சாதிய மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்டும் கூடியவகையில் இந்த வெற்றியை விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கிய மக்களுக்கு எனது சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை மறுநாள் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் அவருடைய ஆட்சி நல்லாட்சி அமைய சமூக நீதியை பாதுகாக்கும் அரசு அமைய விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக ஒத்துழைக்கும். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி முன்னெடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் குறிப்பாக மாநில உரிமைகள் மீட்பு மொழி இன நலன்கள் பாதுகாப்பு விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வருங்காலங்களில் எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும். மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராகவும் மாநில உரிமைகளுக்கு எதிராகவோ அமைந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதிக்கீடு முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த சூழலில், தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது முழுமையான வெற்றி என்ற L.முருகன் கருத்து குறித்த கேள்விக்கு:2001ல் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது 20 வருஷம் கழிச்சு 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள வெற்றியும் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு விழுந்த ஓட்டுகள் தான்.தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவர் மருந்து குறைபாடுகள் குறித்த கேள்விக்கு:புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சிக்கு கொரோனா முதன்மையான ஒரு சவால் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வது என்பதுதான் போதிய வசதிகள் இல்லை ஐசியு போன்ற தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட முடியாத நிலை உள்ளது ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்ற உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தடுப்பூசி மருந்து கூடுதலான விலைக்கு பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள்தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று ராகுல் காந்தி கருத்து குறித்த கேள்விக்கு:கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மைய அரசு தனித்து இதில் எந்த சாதனையும் சாதித்துவிட முடியாது. பொதுமக்களும் கடுமையாக உழைக்க வேண்டும். ஊரடங்கால பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆனால் அதைவிடவும் உயிரை காப்பாற்றுவது முக்கியமானது. எனவே முழு ஊரடங்கு தேவைப்பட்டால். மைய மாநில அரசுகள் அதை செய்ய வேண்டும் மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image