மலைகிராம மக்களுக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிவாரண உதவி !

வேலூர் மாவட்டம் ஆவலரங்கப்பள்ளி மலை கிராம மக்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவும், மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையும் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வறட்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்துடன் துண்டிக்கப்பட்டு கிடக்கும் மலையடிவார கிராமமான ஆவலரங்கப்பள்ளி மக்களுக்கு அந்த பகுதியின் காவல் ஆய்வாளர் இலக்குவன் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் அந்த பகுதியில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கினார்.

மேலும் வேலூர் மாவட்ட காவல்துறை நக்சல் சிறப்பு பிரிவும் அன்பு அறக்கட்டளையும் இணைந்து, அந்த பகுதியினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளையும் செய்து தருவதாக கூறியிருக்கின்றன. இந்த நிகழ்வில் லோக் ஜனசக்தி நிர்வாகி அகமது தக்கியூதீன், அன்பு அறக்கட்டளையை சேர்ந்த ரஞ்சித்குமார், மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image