சுரண்டை பேரூராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி முகாம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் அதிகளவு பெருகி வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளது.அதன் அடிப்படையில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு ஊசி போட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து நிர்வாக அதிகாரி வெங்கட கோபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சுரண்டை பேரூராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சுரண்டை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் வரும். 20.04.2021 செவ்வாய்கிழமை அன்று வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தங்கள் வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களை கொண்டு வந்து வெறிநாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி போடுவதற்கு நாய் கொண்டு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image