செங்கத்தில் பயிர் உரங்களின் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் காமராஜ் தலைமையில் பயிர் உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுங்களைவிவசாயி என்று கூறிக்கொள்ளும் மோடி, அமித்ஷா, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்றவர்கள் விவசாய உரங்களின் விலையை மூட்டைக்கு ரூ 700 ரூபாய் உயர்த்தி உள்ளதாகவும் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து 155 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி 550 பேர் உயிர் இழந்துள்ளார்கள் எனவும் இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் முதுகெலும்பு என கூறப்படும் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் எனவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் அண்ணாமலை ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் மற்றும் விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image