நெல்லையில் பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் நடிகர் விவேக் மறைவிற்கு மரக்கன்று நட்டு வைத்து அஞ்சலி..

தமிழ் திரைப்பட நடிகரும் சமூக சிந்தனையாளருமான விவேக் நினைவாக 17.04.2021 இன்று பாளையங்கோட்டையில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நட்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகர் விவேக் மறைவிற்கு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பாக அஞ்சலி செலுத்தும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனருமான கவிஞர் பே.ராஜேந்திரன் தலைமையில் ,நெல்லைகலை மற்றும் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, சென்னை கவின் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் ஓவியர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு விவேக் நினைவு மரக்கன்றுகளை நட்டி வைத்து அஞ்சலியை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலையாசிரியர் சொர்ணம்,கவிஞர் சுப்பையா,லெனின், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image