அதிமுக அரசு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது .

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 358 பயனாளிகளுக்கு ரூபாய் 96.29 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, 629 பயனாளிகளுக்கு ரூபாய் 1.4 கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை திருமண உதவித்தொகை இயற்கை மரணம் உதவித்தொகை சமூக நலத்துறை சார்பில் 300 பயனாளிகளுக்கு ரூபாய் 2.21 கோடி மதிப்பில் ஊராட்சித் துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்காக அனுமதி ஆணை ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ,செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் ,அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image