Home செய்திகள் கீழடியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கு எலும்புகள்!!!

கீழடியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கு எலும்புகள்!!!

by mohan

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக அகழாய்வுப் பணிகள் கீழடி கொந்தகை மகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் கீழடி அகழாய்வு தளத்தில் ஏற்கனவே சுடுமண்ணால் செய்யப்பட்ட பானை ஓடுகள் பானைகள் செங்கல் கற்களாலான கட்டுமான சுவர்கள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.

வணிகத்திற்கு பயன்படுத்தக்கூடிய எடைக்கற்கள் கண்டறியப்பட்ட நிலையில் விலங்கின் எலும்பு ஒன்று அகலாய்வு தளத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.தற்போது அகலாய்வு தளத்தின் மற்றொரு குழியில் விலங்கின் எலும்பு கண்டறியப்பட்டுள்ளது  இந்த எறும்பு ஆனது எந்த விலங்கு இனத்தைச் சேர்ந்தது எனவும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இரண்டு எலும்புகள் கண்டறியப்பட்டுள்ள இந்த அகழாய்வு தளத்தில் மேலும் முழுமையான ஆய்வுக்கு பிறகு அந்த அகழாய்வு குழியில் வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கின்றனவா என்று தெரியவரும்.மேலும் முழுமையான ஆய்வுக்குப் பிறகு இது எந்த உயிரினத்தின் எலும்பு எத்தனை ஆண்டுகள் பழமையான எலும்பு என்பது தெரியவரும் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!