வழக்கறிஞர் காலை உடைத்த போலீஸ்! – 3 ஆண்டுகளுக்கு பின்னர் 8 பேர் மீது வழக்கு!

 வழக்கறிஞர் காலை உடைத்த போலீஸ்! – 3 ஆண்டுகளுக்கு பின்னர் 8 பேர் மீது வழக்கு!

வழக்கறிஞர் செம்மணி
நெல்லை மாவட்டம் பழவூரில் போலீஸாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞரை, போலீஸார் தூக்கிச் சென்று அடித்து காலை உடைத்தார்கள். இதுதொடர்பாக 3 வருடங்களுக்குப் பின்னர் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வருகிறார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ்
கடந்த 2017-ம் ஆண்டு வள்ளியூர் டிஎஸ்பி குமார், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் மீது வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வகையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் ஜோஸ், அவர் வழக்குப் பதிவு செய்த அன்று இரவில் செம்மணியின் வீட்டுக்குச் சென்று அவரை அடித்து இழுத்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், போலீஸாரின் அத்துமீறலை, வழக்கறிஞர் செம்மணியின் துணைவியார் செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதனால், அந்த போனை வாங்கி தரையில் அடைத்து உடைத்த இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஜ், பெண் என்று பாராமல் அவரையும் கையை முறுக்கித் தாக்கியுள்ளார்.

கால் உடைக்கப்பட்ட வழக்கறிஞர் செம்மணி
கால் உடைக்கப்பட்ட வழக்கறிஞர் செம்மணி
பின்னர், செம்மணியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு வைத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-கள் மற்றும் போலீஸார் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீஸார் காவல்துறை டிஎஸ்பி-யான குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று காவலர்கள் என 8 பேர் மீது கொலை முயற்சி உட்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு நியாயம் கிடைக்கும் என வழக்கறிஞர் செம்மணி நம்பிக்கை தெரிவித்தார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered