தமிழக அரசின் இலவசரேஷன் பொருட்கள்-எம்எல்ஏ டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி ஊராட்சியில் தமிழக அரசின் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க எம்எல்ஏ பவுன்ராஜ் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கிதொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கொரோனா நோய் தோற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு ஜூலை மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதனைத்தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடுத்துக்கட்டி ஊராட்சியில் 1200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க திங்கட்கிழமை பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் எடுத்துக்கட்டி ஊராட்சி கிராம மக்களுக்கு டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முத்தையன், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image