இராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியின் 16 வது ஆண்டு விழா.

இராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியின் 16ம் ஆண்டு ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி கயல்விழி 10, 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இப்பள்ளி நல்ல சுற்று சூழல் அமைப்புடன் உள்ளதாகவும், இப்பகுதி மாணவ மாணவிகள் தரம் உள்ள கல்வியை பயன்பெறும் வகையில் இப்பள்ளி நிர்வாகிகள் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். கல்வி, விளையாட்டு, தனித்திறமை , யோகா, டிரம்ஸ், நடனம், இசை, காரத்தே, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும்  பரிசுகளை வழங்கினார்.

பின்னர் சிறப்பு அழைப்பாளர் சீப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (Chief Judicial Magistrate) அனில்குமார் பேசுகையில்: அடிப்படை சட்டங்களை பற்றி மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும், இப்பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால்  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மருத்துவர்கள் இணைந்து  தங்களுடைய கடுமையான மருத்துவ பணிக்கு இடையே இப்பள்ளியை நடத்தி வருகிறார்கள், அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இப்பள்ளி மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்க வேண்டும், தற்போது தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் என்றார். தினமும் ஒரு செய்தித்தாள் படியுங்கள், டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள், இங்கு உள்ள நூலகத்தில் 2000 புத்தகம் உள்ளன, தினமும்  புத்தகம் படிக்கும் பழக்கத்தை எற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்  யோகா மாஸ்டர் சரவணன், சக்கர ஆசணம், பத்மாசணம் சூரிய நமஸ்காராம், மச்ச ஆசணம், பும்மா சணம், சர்வாங் ஆசணம், பஜ்ஜி முத்தாசணம், சீரசாணம், தனுர் ஆசணங்களை மாணவ மாணவிகள் செய்து காட்டினர். அவதார் வேடம் கண்டங்களின் கலாச்சார அடிப்படையில் நாட்டியங்கள் ஆப்பிரிக்கா துபாய் நடனம் ஆடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மருத்துவர் சுப்பிரமணியன். டிரஸ்டி மருத்துவர் பிரேமா சுப்பிரமணியன் பள்ளி செயலாளர் ஹர்சவர்த்தன் சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர் விஜயலெட்சுமி மெட்ரிக் பள்ளி முதல்வர் லலிதா சங்கரி கலந்துகொண்டனர்.